அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு நாளை தேர்வு : கைக்குட்டை எடுத்து செல்ல தடை…மேலும் பல்வேறு தகவல்களை வெளியிட்டுஉள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,663 முதுநிலைபட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, நாளை போட்டி தேர்வு நடக்கிறது. மொத்தம், 2.19 லட்சம் பேர் பங்கேற்கும் இத்தேர்வுக்கு, கைக்குட்டை கொண்டு செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை – ௧ பதவியில், 1,663 இடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம் போட்டித்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு, தமிழகம் முழுவதும், 601 மையங்களில் நாளை நடக்கிறது. மொத்தம், 2.19 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சென்னையில், 41 மையங்களில், 15ஆயிரத்து, 105 பேர் பங்கேற்கின்றனர். காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கும். தேர்வர்கள், காலை, 9:00 மணிக்கே, தேர்வு மையங்களுக்குள் செல்ல வேண்டும்; அதற்கு மேல் அனுமதி கிடையாது. தேர்வறைக்குள், இரண்டு, ‘பால் பாய்ண்ட்’ பேனா, ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. தேர்வு மையத்திற்குள்வரும் தேர்வர்களை, கல்வித்துறை பணியாளர்களும், போலீசாரும் சோதனையிடுவர்.

சோதனை முடித்து, 9:30 மணி முதல் தேர்வு துவங்கும் வரை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான காத்திருப்பு அறையில் இருக்க வேண்டும். தேர்வர்கள், கணினி, கால்குலேட்டர், மொபைல்போன், மின்னணு கடிகாரம், கைக்குட்டை உட்பட எந்த பொருளையும், தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. ஹால் டிக்கெட்டில் புகைப்படம் இல்லாதோர், ஒரு பாஸ்போர்ட் மற்றும் தபால்தலை அளவு புகைப்படம் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், பிற்சேர்க்கை படிவம் – 8-ஐ, www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, சான்றொப்பம் பெற்று எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top