அரசு பள்ளிகளில் தற்காப்பு பயில்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு!உயர்நிலை மாணவியரும் பங்கேற்க வாய்ப்பு

பெண் கல்வி திட்டத்தில், ‘தற்காப்பு கலை’ பயிற்சி பெறும் மாணவியரின் எண்ணிக்கையை, நடப்பாண்டிலிருந்து, அனைவருக்கும் கல்வி இயக்ககம் உயர்த்தி உள்ளது. இத்திட்டத்தை, உயர்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்துவதற்கு, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,090 தொடக்கப் பள்ளிகள், 284 நடுநிலைப்பள்ளிகள், 342 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம், 1,716 பள்ளிகள் உள்ளன.இந்த பள்ளிகளில், அனைவருக்கும் கல்வி இயக்ககம் திட்டத்தின் கீழ், மாணவ – மாணவியருக்கு தற்காப்பு கலை, யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.இந்த பயிற்சிகளை பெறும் மாணவ — மாணவியர், நெறி தவறும் செயல்களில் இருந்து விடுபட்டு, எளிமையாக கல்வி கற்பர் என, நம்பப்படுகிறது.

மாணவியர் நெறி தவறாமல் இருக்க, பெண் கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதில், நடுநிலைப்பள்ளி மாணவியருக்கு, அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், தற்காப்பு கலை மற்றும் யோகா பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன.இந்த திட்டத்தை, 2015- – 16ம் கல்வியாண்டு முதல், அனைவருக்கும் கல்வி இயக்ககம் செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா, 1,000 மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது.இத்திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், நடப்பாண்டில் இருந்து பயிற்சி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த உள்ளனர்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2,000 மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்காக பள்ளிகள் தேர்வு செய்யப்பட உள்ளன.தேர்வாகும் பள்ளிகளில், 40 நாட்கள் சிறப்பு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இன்னும் பள்ளிகள் தேர்வு செய்யப்படவில்லை.உயர்நிலைக்கு ஒரு வாய்ப்பு!அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், 1,000 நடுநிலைப்பள்ளி மாணவியருக்கு, தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. அதை நடப்பாண்டிலிருந்து, இரு மடங்காக உயர்த்தி, 2,000 மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதை, நடுநிலைப்பள்ளி அல்லாது உயர்நிலைப்பள்ளி மாணவியருக்கும், நடப்பாண்டு சொல்லித்தர உள்ளனர்.-கல்வித் துறை அதிகாரி ஒருவர் காஞ்சிபுரம்கராத்தேயின் நன்மைகள்! தன்னம்பிக்கை வளரும் மன உறுதி அதிகரிக்கும்எந்த ஒரு செயலையும் எளிமையாக செய்யும் மன நிலை ஏற்படும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top