தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங் கள் (ஐடிஐ) மற்றும் தனியார் ஐடிஐ-க்களில் உள்ள அரசு ஒதுக் கீட்டு இடங்களின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மாவட்ட அளவில் ஜூன் 23 முதல் நடைபெற்று வருகிறது.
மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில்விண்ணப்பதாரர்கள் கலந்தாய் வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
கலந்தாய்வு நாள், நேரம், இடம் ஆகிய விவரங்கள் விண்ணப்ப தாரர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட் டுள்ளது. விண்ணப்பதாரர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டு கலந் தாய்வு நாள், இடம், நேரம் ஆகிய விவரங்களை அறியலாம்.