அங்கீகாரம் பெறுவதில் அலட்சியம் விதிமீறும் மழலையர் பள்ளிகள்

அங்கீகாரம் பெறவேண்டும் என்ற அரசு உத்தரவை, அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், அடிப்படை வசதியற்ற நிலையில் மழலையர் பள்ளிகள் செயல்படும் நிலை நீடிக்கிறது.

தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள், துவக்க நிலை அங்கீகாரம் பெறுவதோடு, மூன்று ஆண்டுகளுக்கு, ஒரு முறை தொடர் அங்கீகாரமும் பெற வேண்டும். நிறுத்தி வைப்புபோதிய உள்கட்டமைப்பு வசதியில்லாத பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகாரம் வழங்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.அனைத்து வகை கல்வி நிறுவனங்களும் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற, உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை பின்பற்றி, கடந்த, 2015ல், மழலையர் பள்ளிகளும் அங்கீகாரம் பெற வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.ஆனால், மழலையர் பள்ளி துவக்கப்படுவது, சமீப காலமாக அதிகரித்து உள்ளது. ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் வண்ண படங்கள் வரைந்து, ‘ப்ளே ஸ்கூல்’ பள்ளியாக மாற்றி விடுகின்றனர்.இப்பள்ளிகள் நடத்தப்படுவது குறித்து, தொடக்கக்கல்வித்துறைக்கு தகவல் கூட தெரிவிப்பதில்லை.

யு.கே.ஜி., வரையிலான வகுப்புகள் மட்டுமே இப்பள்ளிகளில் நடத்தப்படுவதால், பெற்றோரும் அங்கீகாரம் குறித்து கேள்வி கேட்பதில்லை.

அலட்சியம்இது குறித்து, தொடக்கக் கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில், அங்கீகாரம் பெறாதவற்றை மூடுவதற்கே, பல்வேறு தடைகள் வருகின்றன.
நீதிமன்ற ஆணை, அரசியல் தலையீடு உள்ளிட்டவற்றை துணையாக கொண்டு, ஏராளமான எண்ணிக்கையில், அங்கீகாரம் பெறாத பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மழலையர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டப்படுகிறது. இதனால், அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்கவோ, அவற்றை பெறவோ பள்ளிகளும்
அக்கறை காட்டுவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top